ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: குடியரசுத் தலைவரை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:27 pm
andhra-pradesh-cm-meets-president-for-special-status-for-andhra

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை இன்று சந்தித்து முறையிட்டார்.

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து, அவர் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகினார். 

தொடர்ந்து பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக அவர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று டெல்லியில் அவரது தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  இதில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து, இன்று சந்திரபாபு நாயுடு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டார். குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நாயுடு தலைமையில் பேரணி நடைபெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் அவரது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 10 பேர் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட்டனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close