ரபேல் போர் விமான ஒப்பந்தம்- சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 12:35 pm
rafale-cag-report-to-be-tabled-in-parliament-today

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரான்ஸில் உள்ள ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். 

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இன்று, சிஏஜி அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போதைய மக்களவையின், கடைசி கூட்டம், நாளை முடியவுள்ள நிலையில், இன்று, சிஏஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close