நிலமுறைகேடு வழக்கு- தாயாருடன் ராபர்ட் வதேரா ஆஜர்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 12:45 pm
robert-vadra-his-mother-maureen-to-appear-before-ed

சட்டவிரோதமாக சொத்து வாங்கிய  வழக்கில் 3 முறை டெல்லியில் அமலாக்கப் பிரிவு விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா, நிலமுறைகேடு வழக்கு தொடர்பாக முதல்முறையாக ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ராபர்ட் வதேராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஸ்கைலைட் நிறுவனம், பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ராஜஸ்தானின் பிக்கானிர் வட்டத்தில் நிலஒதுக்கீட்டை பெற்றதாகவும், குறைந்த விலைக்குப் பெற்ற நிலத்தை பன்மடங்கு அதிக விலைக்கு விற்று முறைகேடாக லாபம் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் வதேரா ஆஜராகவில்லை.

அமலாக்கத்துறை உத்தரவுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை வதேரா அணுகினார். அவரும் அவரது தாயாரும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் வதேரா, தமது தாயாருடன் விசாரணைக்கு ஆஜரானார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close