பிப்.21ல் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும்: சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 12:55 pm
ram-temple-we-will-lay-foundation-stone-on-february-21-says-swaroopanand-saraswati

பிப்ரவரி 21ம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என,  துவாரகா சாரதா பீடத்தின் மடாதிபதி சங்கராச்சார்யர் ஜகத்குரு சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா கடந்த ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. உள்நாடு மட்டுமின்றி உலகில் பல பகுதிகளிலும் இந்திய வம்சாவழியினர் பிரயாக்ராஜிற்கு வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி நடைபெறும் என்று சுவாமி ஸ்வரூபானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், 'பிப்ரவரி 17ம் தேதி பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து அயோத்திக்கு பாதயாத்திரையாகச் சென்று பிப்ரவரி 21ம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும். பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற சாதுக்களின் பங்கேற்ற மூன்று நாள் பொதுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close