காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:48 pm
militant-soldier-killed-in-jammu-kashmir-s-pulwama-encounter-underway

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நமது இந்திய ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இன்று காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ரத்னிபோரா பகுதியில், தீவிரவாதிகள் நுழைந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இந்திய ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் உள்நுழைந்து இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய பாதுகாப்புப்படையினரும், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close