அமித்ஷாவின் கடிதம் முழுவதும் புழுகு மூட்டையாக உள்ளது- சந்திரபாபுநாயுடு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 04:12 pm
delusional-politics-about-to-end-amit-shah-to-chandrababu-naidu-in-open-letter

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அமித்ஷாவின் கடிதம் முழுவதும் புழுகு மூட்டையாக உள்ளது என முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலத்திக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததை கண்டிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் விலகியது. இதுதொடர்பாக, ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு பா.ஜ.க. தலைவர் அமித்ஷா எழுதிய கடிதத்தில், மத்தியில் பதவியேற்றதும், 3 ஆண்டுகளில் மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ஆயிரத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

ஆனால், மாநில அரசால் 12 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. எஞ்சியுள்ள 88 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அமித்ஷாவின் கடிதம் முழுவதும் புழுகு மூட்டையாக உள்ளது என முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தனது கடிதத்தில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியதாகவும், அதனை நாங்கள் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். 

மாநிலத்தின் நலனுக்காக தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தோம். அரசியல் காரணத்திற்காக கூட்டணியை முறித்ததாக அமித்ஷா கூறியுள்ளார். நாங்கள் மக்கள் விருப்பத்திற்காக தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம். நாங்கள் ஒன்றும் ஒரே இரவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close