முடிவெட்டுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுத்த வெளிநாட்டு வாலிபர்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 05:41 pm
this-foreigner-paid-30-thousand-for-a-20-rupees-haircut-in-india

தெரு ஓர கடையில் முடிவெட்டிய வெளிநாட்டு வாலிபர் ஒருவர் கடைகாரருக்கு 30 ஆயிரம் ரூபாய் கூலியாக கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பொதுவாகவே வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளிடம் நம் வியாபாரிகள் நார்மலாக விற்கும் காசை விட அதிக காசிற்கே விற்பர். ஹோட்டல் ஆரம்பித்து பிளாட்பாரக்கடை  வரை வெளிநாட்டவரை பார்த்தாலே எக்ஸ்ட்ரா காசிற்கு தான் வியாபாரம். 
 
இந்நிலையில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அகமதாபாத்தில் தெரு ஓரக்கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார். அவர் நினைத்தது போலவே அந்த கடைகாரர் அவருக்கு சூப்பராக முடி வெட்டி இருக்கிறார். பின்னர் முடி வெட்டியதற்கான தொகை எவ்வளவு என கேட்டுள்ளார். 20 ரூபாய் தாருங்கள் என அந்த கடைகாரர் கூறியிருக்கிறார்.

கடைக்காரரின் நேர்மையை பார்த்து அசந்துபோன  வாலிபர் அவரிடம் 30 ஆயிரம் ரூபாயை கொடுத்து குடும்ப செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் அந்த கடைக்காரர் திக்குமுக்கடி போயுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close