கலாபவன்மணியின் 5 நண்பர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 06:34 pm
kalabhavan-mani-death-5-friends-agreed-to-take-lie-detector-tests

கலாபவன் மணி மரண விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், அவரது நண்பர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கோரிக்கை வைத்திருந்த நிலையில், 5 பேரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் ஆண்டு கல்லீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலில் விஷம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததை தொடர்ந்து, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை வழக்கு குறித்த உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கலாபவன் மணியின் 5 நண்பர்களை விசாரணை செய்து வந்த அதிகாரிகள், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் தாமாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளதால், அவர்களை ஒத்துழைக்க அதிகாரிகள் வலியுறுத்தினர். கடந்த 8ம் தேதி, அவர்கள் 5 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்வதாக, நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, எர்ணாகுளம் தலைமை நீதிபதி, இடுக்கி, சபுமோன் உள்ளிட்ட 5 பேரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த அனுமதியளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close