நாடாளுமன்றத்தில் எதிரி; நீதிமன்றத்தில் நண்பன்: ரபேல் விவகாரத்தில் கபில் சிபல் குழப்பம்

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 07:31 pm
kapil-sibal-takes-two-stands-in-the-rafale-controversy

ரஃபேல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும் ரிலையன்ஸ் நிறுவனத்தையும் தாக்கி பேசி வரும் நிலையில், காங்கிரஸின் கபில் சிபல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் ஆஜராவது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக பல விதிமீறல்களில் ஈடுட்டதாக  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தை விமர்சித்து தொடர்ந்து அறிக்கைகளை ராகுல் காந்தி வெளியிட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

இதுகுறித்து கேட்டபோது, "ஆமாம். நாடாளுமன்றத்தில் அனில் அம்பானிக்கு நான் எதிரானவன். அதேநேரத்தில், நீதிமன்றத்தில் தொழில்ரீதியாக நான் அவருக்காக ஆஜராகிறேன்" என்று கபில் சிபல் கூறினார்.

ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ரஃபேல் விவகாரத்தில், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் தாக்கிப் பேசி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் கபில் சிபல் இப்படி மாற்றி பேசுவது, விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close