டெல்லி- தீவிபத்து ஏற்பட்ட ஓட்டலின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Feb, 2019 07:31 pm
emergency-exits-were-shut-at-delhi-hotel-where-fire-killed-17

சட்டவிதிகளை பின்பற்றாமல் டெல்லியில் தீவிபத்து ஏற்பட்ட ஓட்டலின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஒட்டலில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுமார் 26 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின் காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் இதுவரை மீட்கப்பட்டு, படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஏற்பட்ட அதிக உயிரிழப்பிற்கு காரணம் ஓட்டலில் அவசர கால வழிகள் மிகவும் குறுகலாக இருந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியை மீறி ஆறாவது மாடியில் ரெஸ்டாரண்ட் இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த ஓட்டலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close