வேண்டுமென்றே திரிக்கிறார் ராகுல் காந்தி; ரஃபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 04:54 am
facts-are-being-distorted-reliance-releases-statement-on-rafale

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடந்தவற்றை வேண்டுமென்றே திரிப்பதாகவும், ஏர்பஸ் ஒப்பந்தத்திற்கும் ரஃபேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை தொடர்ந்து தாக்கி பேசி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு ஈமெயிலை குறிப்பிட்டு, புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் 2015ம் ஆண்டு, ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசியதாகவும், அதில் ரஃபேல் புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கூறினார். அனில் அம்பானியிடம் பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிவித்துவிட்டதாக, ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ராகுல் காந்தி குறிப்பிட்ட அந்த ஈமெயில் 2015ம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அனுப்பப்பட்டதாகவும்; அது ஏர்பஸ் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை குறிப்பது என்றும், ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ராகுல் காந்தி, வேண்டுமென்றே நடந்தவற்றைத் திரிப்பதாகவும், ரிலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ரஃபேல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் 2016ம் ஆண்டு, ஜனவரி 25ம் தேதி தான் போட்டுக் கொண்டதாகவும்; ராகுல் கூறுவது போல 2015ல் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close