நெட்டிசன்கள் ஜாக்கிரதை... ட்விட்டரில் இதையெல்லாம் செய்யக்கூடாதாம்!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:55 am
twitter-lists-spammy-behaviour-users-be-warned

இந்திய அரசுடன் ட்விட்டர் சமூக வலைத்தளம் சமீபத்தில் முட்டிக் கொண்ட நிலையில், 'ஸ்பேமிங்' எனப்படும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை தவிர்க்கவும் வாடிக்கையாளர்களிடம் ட்விட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் வலதுசாரி ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு  எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தை நாடாளுமன்ற ஐடி கமிட்டி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ட்விட்டர் தரப்பில் இருந்து யாரும் ஆஜராக மறுத்துவிட்டனர். நாடாளுமன்ற சம்மனை மறுத்தது சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஸ்பேமிங் (Spamming) எனப்படும் செயலில் ஈடுபடும் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் எச்சரித்துள்ளது. எதெல்லாம் ஸ்பேமிங் எனப்படும் செயலாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ட்விட்டர் பட்டியலிட்டுள்ளது....

 

— Twitter India (@TwitterIndia) February 12, 2019

 

ட்விட்டரின் டைரக்ட் மெசேஜ் மூலம் தொடர்ந்து லிங்குகளை மட்டும் அனுப்புவது.

வெவ்வேறு கணக்குகள் மூலம் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது

ஒரே கணக்கில் இருந்து மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை பதிவு செய்வது

ஒரே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி பயன்படுத்துவது

ட்ரெண்டிங்கில் கொண்டுவருவதற்காக, ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்வது

பதில் வராமல் திரும்ப திரும்ப ஒருவருக்கு Reply அல்லது mention செய்து தொந்தரவு கொடுப்பது

ரீட்வீட், பாலோவர், லைக் உள்ளிட்டவற்றை வாங்குவது

பாலோவர் எண்ணிக்கையையும், ரீட்வீட்களையும் அதிகப்படுத்துவதாக கூறும் ஆப்களை பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டீர்கள் என்றால், ட்விட்டர் உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாம்....

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close