"அலைமோதும் கூட்டம்"; பழைய புகைப்படத்தை பகிர்ந்து மாட்டிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:55 am
priyanka-gandhi-s-rally-congress-spokesperson-posts-old-photo-and-gets-caught

பிரியங்கா காந்திக்கு உத்தரபிரதேச மாநாட்டில் பெரும் கூட்டம் கூடியுள்ளதாக பாராட்டி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன் தெலங்கானாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து, நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டார். 

உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சேர்ந்து நடத்திய லக்னோ பொதுக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்ததாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ப்ரியங்கா சதுர்வேதி ட்விட்டரில் எழுதினார். மக்கள் கூட்டம் அலைமோதும் புகைப்படங்களை அவர் பகிர்ந்தார்.

அவற்றில் ஒரு புகைப்படம், இரு மாதங்களுக்கு முன் தெலங்கானாவில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் பேரணியில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் காங்கிரஸ் கட்சியையும், புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சதுர்வேதியையும் கலாய்த்து வந்தனர். அந்த ட்வீட்டை உடனடியாக பிரியங்கா சதுர்வேதி நீக்கினார். பின்னர் தான் தவறு செய்துவிட்டதாக கூறி, உண்மையான புகைப்படங்களை பகிர்ந்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close