கடந்த 2014 -2016 ஆண்டுகளில் நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2014 -இல் சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டில் மொத்தம் 1,286 வழக்குகள் பதிவாகின. 2015, 2016 ஆண்டுகளில் முறையே இவ்வழக்குகளின் எண்ணிக்கை 2,384 , 2,522 என அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் மொத்தம் 6,100-க்கு அதிகமான சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
newstm.in