இன்னும் 15 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி வெளியாகும்- மம்தா

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 09:52 am
within-15-days-we-will-have-election-dates-mamata

மோடி அரசு காலாவதியாகி விட்டது, இன்னும் 15 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இன்று தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

இதற்காக டெல்லி கிளம்பிய மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிட்டது. அடுத்த முறை தாம் பிரதமராக முடியாது என்று அவருக்கே தெரியும். இன்னும் 15 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். ஒற்றுமையான இந்தியா உருவாக வேண்டும். உருவாகும் புதிய இந்தியா ஜனநாயகப்படி இருக்கும்" என்றார். 

சமீபத்தில் கொல்கத்தாவில் பிரதமர் மோடிக்கும், பாஜக அரசுக்கும் எதிராக மம்தா மிகப்பெரிய கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close