முத்தலாக் மசோதா குறித்து இன்று மாநிலங்களவையில் பரிசீலனை

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 10:39 am
triple-talaq-bill-to-be-tabled-in-rajya-sabha-today

முத்தலாக் தடை சட்ட மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அரசு பரிசீலனைக்கு கொண்டு வரவுள்ளது. மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால், சட்டமாக மாறிவிடும்.

அதே சமயம், நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. முத்தலாக் தடை சட்ட மசோதாவை மாநிலங்களவையில் இன்று நிறைவேற்ற முடியாவிட்டால், அந்த மசோதா காலாவதியாகிவிடும். முஸ்லிம் ஆண்கள், அவர்களது மனைவியை மூன்று முறை உடனுக்குடன் தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை தடை செய்யும் வகையில், முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. முத்தலாக் தடை மசோதா என்று அழைக்கப்படும் அந்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி அந்த மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அவசரச் சட்டம் கடந்த மாதம் முதல் அமலில் இருக்கிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close