2014 தேர்தல் வரலாறு மீண்டும் திரும்பும்: பிரகலாத் மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 11:08 am
modi-will-win-again-in-2019-prahlad-modi

வரும் மக்களவைத் தேர்தலில், 2014- ஆம் ஆண்டு தேர்தல் வரலாறு மீண்டும் திரும்பும் என்று பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலாத் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், கர்நாடக மாநிலம் மங்களூரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமராவார். அதாவது, 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரலாறு மீண்டும் திரும்பும். 

பிரியங்காவின் வருகையால் காங்கிரஸில் மாயங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து அமைத்து வரும் மூன்றாவது அணி தேர்தலில் எடுபடாது என்று பிரகலாத் மோடி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close