ரஃபேல் ஒப்பந்தம் குறித்த சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 06:06 pm
rafale-deal-cag-report-placed-in-rajya-sabha

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் குறித்த மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சியில் பேரம் பேசப்பட்டதைக் காட்டிலும், 2.8% குறைவான விலையிலேயே ரஃபேல் விமானங்களை பா.ஜ.க. அரசு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே, மக்களவையில் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம், இந்திய விமானப் படைக்கு மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் குறித்த தணிக்கை அறிக்கையை சிஏஜி மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளது. அதில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, பிற போர் விமானங்களின் விலையையும், ரஃபேல் போர் விமானத்தில் விலையையும் சிஏஜி ஒப்பீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close