பிரியங்கா பங்கேற்ற முதலாவது பேரணியில் 50 செல்போன்கள் திருட்டு!!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 12:10 pm
rafale-deal-cag-report-placed-in-rajya-sabha

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா கலந்து கொண்ட முதல் பேரணியில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போயின. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டவர் பிரியங்கா வத்ரா. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டல பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின், முதல் முறையாக பங்குகொண்ட பேரணி கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.

லக்னௌ விமான நிலையம் முதல் காங்கிரஸ் தலைமை அலுவலகம் வரையில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பிரியங்கா வத்ராவுடன், அவரது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்தப் பேரணியில் வினோதமான சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதாவது, கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு இடையே திருடர்கள் புகுந்து 50க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் மற்றும் பர்சை திருடிச் சென்றுவிட்டனர். இதில், மாவட்ட துணை ஆட்சியர், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் உள்ளிட்டோரது செல்போன்களும் பறிபோயிருக்கிறதாம். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close