டெல்லியில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 01:40 pm
ahead-of-opposition-s-mega-jantar-mantar-rally-poster-war-plays-out-on-delhi-streets

டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று கூட்டாக நடத்தும் பேரணியில், 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில்  ஜந்தர் மந்தரில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினார். இதில் நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார்.

இதற்கிடையே ஆந்திர முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தற்போது டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்று கெஜ்ரிவால் கூட்டியுள்ள பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். எதிர்க்கட்சிகள் பேரணியில் கலந்து கொள்வதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்துள்ளனர். கூட்டம் நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜந்தர் மந்தரில் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் எதிர்கட்சிகள் பாஜக அரசை கண்டித்து போஸ்டர்கள் அடித்துள்ளனர். மறுபுறம் பாஜகவினரோ மம்த‌ாவை தீதி டெல்லிக்கு உங்களை வரவேற்கிறோம். ஜனநாயகம் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வந்துள்ளதற்கு நன்றி என்று அதில் அச்சிடப்பட்டுள்ளது. 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close