குஜ‌ராத்- சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அருகே தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 02:14 pm
fire-near-sardar-patel-s-statue-of-unity-in-gujarat-s-kevadia

குஜ‌ராத்திலுள்ள சர்தார் பட்டேல் ஒற்றுமை சிலை அருகே உள்ள ஒரு கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் திறமையுடன் போராடி தீயை அணைத்தனர்.

குஜராத் மாநிலம் கேவதியா மாவட்டத்தில் சர்தார் வல்லபாயின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது.

திறப்பு விழாவிற்கு பின் ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் இந்த சிலையை பார்வையிட்டுள்னர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இந்த பிரமாண்ட சிலை அருகே உள்ள ஒரு கிடங்கில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதே போல் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர தங்கும் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close