அனில் அம்பானிக்காக வாதம் - கபில் சிபலின் இரட்டை வேடம்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 01:05 pm
kabil-sibals-double-standard-as-a-party-leader-and-counsel-for-anil-ambani

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியை குற்றம்சாட்டும் அதே வேளையில், அவர் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் கபில் சிபல். அம்பானியை விமர்சிக்கும்போது காங்கிரஸ் மூத்த தலைவராகவும், அவருக்காக வாதாடும்போது மூத்த வழக்கறிஞராகவும் தனது கடமையை திறம்பட செய்து வருகிறார் கபில் சிபல்.

ரஃபேல் விமானங்களுக்கான உதிதி பாகங்கள் தயாரிப்பு, பராமரிப்பு போன்ற பணிகளுக்கான துணைநிலை ஒப்பந்தம் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரூ.30,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். குறிப்பாக, ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு 10 நாள் முன்பாகவே அதுகுறித்த விஷயங்கள் அம்பானிக்கு தெரியும் என்று அவர் நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்ட கபில் சிபல், கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் பிரதமர் மோடியின் பயணத்தின்போது ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அனில் அம்பானி, பிரான்ஸ் அரசு உள்ளிட்டோருக்கு தெரிந்திருக்கிறது. தற்போது மத்திய அரசின் பொய் முகம் வெளிவந்துள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, எரிக்சன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.550 கோடி நிலுவைத் தொகையை வழங்காமலேயே, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளை ஜியோ நிறுவனத்திடம் விற்றுவிட்டதாகக் கூறி, அனில் அம்பானிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எரிக்சன் நிறுவனம் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அனில் அம்பானிக்காக கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். இதுகுறித்து கபில் சிபல் கூறும்போது, இது இரு தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி என்றும், 20 ஆண்டுகளாக அனிம் அம்பானிக்காக வாதாடி வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close