மாநிலங்களவை தேதி குறி்ப்பிடாமல் ஒத்திவைப்பு... காலாவதியான முத்தலாக் தடைச் சட்ட மசோதா!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 01:15 pm
rajya-sabha-postponed-without-mentioned-date

நாடாளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 -ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இக்கூட்டத்தொடர் இன்று மாலையுடன் நிறைவடைவதாக இருந்தது.
இந்த நிலையில், முன்னதாக மதியம் 1 மணிக்கே, மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத் தொடரில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவ்விரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் அவை காலாவதியாகின.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close