சிங்கிளாக இருப்பவர்களுக்கு டீ இலவசம்! எங்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 01:25 pm
this-ahmedabad-cafe-will-serve-free-chai-to-all-singles-on-valentine-s-day

காதலர் தினத்தன்று பெரும்பாலாக உலகம் முழுவதும் ஹோட்டல், ரெஸ்டாரண்ட் அனைத்தும் படு பிசியாக இருக்கும். இந்த நிலையில் சிங்கிள்ஸ்-களுக்கு காதலர் தினத்தன்று இலவச டீ வழங்குவதாக 'எம்பிஏ சாய் வாலா' (MBA Chai Wala) என்ற ரெஸ்டாரண்ட் அறிவித்துள்ளது. 

'எம்பிஏ சாய் வாலா' (MBA Chai Wala) அகமதாபாத் நகரில் வஸ்திராபூர் நகரில் உள்ளது. கடந்த  2017 ஜூன் 25ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறிய டீ கடையானது தற்போது சற்று பெரிய ரெஸ்டராண்டாக உருவெடுத்துள்ளது. 

எம்.பி.ஏ படிப்பை பாதியிலே கைவிட்ட ப்ராஃபுல் பில்லோர் என்பவர் இந்த கடையின் உரிமையாளர். வழக்கமாக இளைஞர்கள் அதிகமாக இந்த ரெஸ்டாரண்ட்க்கு வருகிறார்கள். டீ மற்றும் ஸ்நாக்ஸ் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதையடுத்து காதலர் தினம் வருவதையொட்டி, காதலர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் ரெஸ்டாரண்ட்கள் மத்தியில் சிங்கிள்ஸ்-களுக்கு சலுகை தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறுகிறார் பில்லோர். 

காதலர் தினத்தன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்த ரெஸ்டாரண்டில் டீ இலவசமாக வழங்கப்படவுள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள சிங்கிள்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close