கொல்கத்தா காவல் ஆணையரிடம் 3 மணி நேரம் விசாரணை

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 01:38 pm
cbi-releases-rajeev-kumar-after-3-hrs-of-grilling-on-ponzi-scam

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரிடம் இன்றும் 3 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ்குமார் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் 18 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அதற்கு பதிலளிக்க தயாராகும் விதத்தில் 18 ஆம் தேதி வரை தனக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐயிடம், ராஜிவ்குமார் முறையிட்டு இருந்தார். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் 3 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close