டெல்லியில் குடிசை பகுதியில் பயங்கர தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 02:15 pm
250-homes-gutted-in-fire-after-slum-in-new-delhi-s-paschim-puri

டெல்லியில் நடந்த தீ விபத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.

டெல்லி பஷ்சிம் புரி என்ற இடத்தில் உள்ள குடிசை பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவியதில் அங்கிருந்த 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன.

மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயில் கருகின. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சிலர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close