ஜம்மு- காஷ்மீர்- கடந்த ஆண்டு 244 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 02:50 pm
over-244-terrorists-killed-in-jammu-and-kashmir-in-2018

கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 244 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 143 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் சதிவேலைகளில் ஈடுப்பட ஊடுருவிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் எத்தனை முறை பயங்கரவாதிகள் நாட்டில் நுழைய பார்த்தார்கள், எத்தனை பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் 135 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2017 ஆம் ஆண்டில் 207 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் 244 பயங்கரவாதிகளை சுட்டுக்கொண்டனர். 2018-ல் தான் அதிகபட்ச எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close