தேர்தல்ல ஜெயிக்குறது இருக்கட்டும்...கோஷ்டி பூசலுக்கு மொதல்ல முடிவு கட்டுங்க :  கட்சியினருக்கு உத்தரவிட்ட பிரியங்கா!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:32 pm
in-her-first-address-to-party-leaders-directs-to-end-factionalism-priyanka

காங்கிரஸ் கட்சியினருக்குள் இருக்கும் கோஷ்டி பூசலுக்கு முதலில் முடிவு கட்டுங்கள் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் (கிழக்கு) பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா கண்டிப்புடன் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக கடந்த வாரம் பொறுப்பேற்ற பிரியங்கா , அம்மாநிலத் தலைவர் லக்னௌவில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின்  லக்னௌ, சுல்தான்பூர், உன்னவ், ஃபதேபூர், பிரதாப்கர் உள்ளிட்ட பல்வேறு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் நேற்று பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதில், வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், யுக்திகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, "தேர்தலில் நாம் வெற்றிபெற கட்சிக்குள் இருக்கும் குழு சண்டை, கோஷ்டி பூசலுக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்" என்று கட்சி நிர்வாகிகளுக்கு பிரியங்கா சற்று கோபத்துடனே உத்தரவிட்டார்.

மேலும், "கட்சி நிர்வாகிகள் தாங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதிகளுக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள் ? அல்லது கடைசியாக எப்போது கூட்டம் நடத்தினீர்கள்?"  என்ற பிரியங்காவின் கேள்விக்கு, கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close