வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணக் கட்டணம் குறைப்பு!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:29 pm
railway-reduces-proposed-fares-of-train-18-tickets

இந்தியாவின் அதிவேக ரயிலான "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸின் (ரயில் 18) பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏசி வசதியுடன்கூடிய இருக்கை பெட்டியில் பயணிக்க முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த 1,850 ரூபாய் கட்டணம்,  1,760 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நவீன படுக்கை வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய பெட்டியில் பயணிப்பதற்கான கட்டணம் 3,520 ரூபாயிலிருந்து 3,310 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லி - வாரணாசிக்கு இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயிலில், வாரணாசியிலிருந்து டெல்லி திரும்புவதற்கான (ரிட்டன் டிக்கெட்) பயணக் கட்டணம் முறையே 1,700 ரூபாய், 3,260 ரூபாய் எனவும் குறைக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை , பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close