10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் வெற்றி பெற எளிய வழிமுறைகள்!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 03:52 pm
cbse-board-exam-2019-these-5-tips-will-help-you-score-well

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி தேர்வுகள் இம்மாதம் தொடங்க இருக்கிறது. 10ம் வகுப்பிற்கு பிப்ரவரி 21ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு பிப்ரவரி 15ம் தேதியும் தேர்வுகள் தொடங்குகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 28 லட்சம் பேர் எழுதுகின்றனர். 

மாணவர்கள் பொதுவாக நன்றாக படித்திருந்தாலும், எந்த தேர்வாக இருந்தாலும் ஒருவித பதற்றத்துடனையே இருப்பர். தேர்வை நினைத்து பயத்திலே அவர்கள் படித்தவை பல மறந்து விடும். மேலும் தேர்வுக்கு எப்படி படிப்பது? எப்படி எதிர்கொள்வது? என்று பல கேள்விகள் இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்..

முறையாக திட்டமிடல்: 

தேர்வுக்கு இன்னும் சிறிது நாட்கள் தான் இருந்தாலும் முறையாக திட்டமிடல் இருந்தால் தேர்வில் வெற்றி பெறலாம். எந்த பாடம், எவ்வளவு படிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு, அதற்கேற்ப திட்டமிடலை செயல்படுத்த வேண்டும். படித்தவற்றை நாள் இறுதியில் ஒருமுறை மீண்டும் படிப்பது அவசியம். 

ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் ஒரு சில நாட்கள் தேர்வுக்கு தயாராக விடுமுறை அளிக்கப்படும் அந்த நாட்களில் கூட முறையாக திட்டமிட்டு நம்பிக்கையுடன் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.

தேர்வு அறைக்கு முன்னதாகவே செல்லுதல்:

படித்த அனைத்தும் தேர்வு அறைக்கு சென்றதும் மறந்து விட்டது- தேர்வு எழுதி விட்டு மாணவர்கள் பொதுவாக கூறும் ஒரு கருத்து இது. அப்படி இருப்பவர்கள் தேர்வுக்கு முன்னதாக படிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். தேர்வுக்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே தேர்வறைக்கு சென்று விட்டு அமைதியாக இருப்பது நல்லது. சற்று தியானத்தில் இருந்தால் கூட படித்தவை அனைத்தும் நினைவில் வரும். 

அதேபோன்று தேர்வுக்கு தேவையான உபகரணங்கள் பென்சில், ரப்பர், பேனா, அளவியல் கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லுதல் அவசியம். 

மாதிரி வினாத்தாள் பயிற்சி:

சென்ற வருடங்களில் உள்ள வினாத்தாள்களை மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும். மாதிரி வினாத்தாள்களை பார்க்கும் போது தேர்வில் எம்மாதிரியான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பது குறித்து ஒரு ஐடியா கிடைக்கும். தற்போது ஆன்லைனிலும் மாதிரி வினாத்தாள்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றை உபயோகித்து பயிற்சி பெறுவது தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கும்.

சமூக வலைத்தளத்திற்கு தடை:

தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றால் முதலில் சமூக வலைத்தளத்தில் இருந்து விடுபடுவது முக்கியமான ஒன்றாகும். பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளத்தில் இருந்தால் தேர்வு முடியும் வரை மாணவர்கள் அதை விட்டு ஒதுங்கியிருப்பது பாடத்தின் மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தும். 

என்.சி.இ.ஆர்.டி புத்தக பயிற்சி:

சிபிஎஸ்இ மாணவர்களைப் பொருத்தவரை என்.சி.இ.ஆர்.டி புத்தகங்களை தேர்வு செய்வது படித்தால் கூடுதல் மதிப்பெண்களை பெறலாம். என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தில் உள்ள செய்முறை கேள்விகளை படிக்கும் போது அத்துடன் பொது அறிவும் கூடும். இது தேர்வில் சிறந்த விடை அளிக்க வழிவகுக்கும். தேர்வில் நீங்கள் எழுதியதற்கு முழு மதிப்பெண் கிடைக்கும். இதன் மூலமாக உங்களது மொத்த மதிப்பெண்களும் அதிகரிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close