கும்பமேளாவில் புனித நீராடினார் அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:03 pm
amit-sha-at-kumbhmela

கும்பமேளாவில் புனித நீராடினார் அமித் ஷா!

உத்தர பிரேதசத்தில் நடைெபற்று வரும் கும்பமேளாவில், பா.ஜ., தலைவர் அமித் ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்களும் நீராடினர். 

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைெபற்று வரும் கும்பமேளாவில், இதுவரை கோடிக்கணக்கானோர் நீராடியுள்ளனர். தொடர்ந்து பலர் நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா நேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன், அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், சன்னியாசிகள் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்களும் நீராடினர். 

அங்கு குழுமியிருந்த சன்னியாசிகளுடன் சில நிமிடங்கள் பேசிய அமித் ஷா, காவி உடை உடுத்தி, அங்குள்ள அகாடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்தில் பங்கேற்றார். 

பின், ராமர் கோவில் கட்டுவது குறித்து, சன்னியாசிகள், அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமித் ஷா உறுதியளித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close