மோடி தான் மீண்டும் பிரதமர் - அதிர்ச்சியூட்டும் முலாயம்

  ஸ்ரீதர்   | Last Modified : 13 Feb, 2019 06:20 pm
hope-you-become-pm-again-mulayam-singh-says

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று நாடாளுமன்ற இறுதி நாள் கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தார்.

மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங், பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி எப்பொழுதும் நியாயமான வேலைகளைச் செய்திருக்கிறார். 

என்னுடைய விருப்பம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும். அனைத்து மக்களவை உறுப்பினர்களும் மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். 

மேலும், பிரதமர் மோடி அனைவருடனும் ஒருங்கிணைந்து செல்ல விருப்பப்பட்டார். எனக்கு தெரிந்தவரை நரேந்திர மோடி அனைத்து தலைவர்களையும் கைகூப்பி வணங்கி மரியாதையை செலுத்துகிறார் என்றார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தின்போது முலாயம் சிங்கிற்கு அடுத்தபடியாக உட்கார்ந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் தனது மகிழ்ச்சியை சிரிப்பு மூலம் வெளிப்படுத்தினார்.

முலாயம்சிங்கின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில் முலாயம் சிங்கின் கருத்துக்கு நான் வேறுபடுகிறேன். மூத்த அரசியல்வாதியான முலாயம் சிங்கின் கருத்துக்கு நான் மாறாக பேசவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close