டெல்லியில் காகித அட்டை தொழிற்சாலையில் தீவிபத்து

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 12:32 pm
fire-breaks-out-in-paper-card-factory-in-delhi

டெல்லியில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டுவர 29 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி வருகின்றனர்.

டெல்லியில் நாராய்ணா தொழிற்பேட்டை பகுதியில், காகித அட்டை தயாரிக்கும் ஆலையில், இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் 29 தீயணைப்பு வாகனங்களுடன், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்ச் சேதமோ யாருக்கும் பாதிப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close