குஜராத்தில் ராகுல் இன்று தேர்தல் பி‌ரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 01:55 pm
rahul-gandhi-to-flag-off-congress-gujarat-campaign-today

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக குஜராத் செல்கிறார். அங்கு அவர் தனது முதல்கட்ட  நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

பிரதமர் மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடனும் இன்று அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close