டெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 10 ரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமாகியுள்ளது.
வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கான்புதிரன் குறைவு காரணமாக, ரயில் நிலையத்தில் இருந்தும் ரயில்கள் புறப்பட முடியவில்லை. இதன் காரணமாக 10 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
newstm.in