கடன் தொகையை திரும்ப பெற வங்கிகள் மறுப்பது ஏன்? மல்லையா கேள்வி

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 02:51 pm
why-banks-are-not-accepting-my-repayment-of-loan-amount-mallaya

பா.ஜ., தலைமையிலான, ஐந்து ஆண்டு காலத்தின் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கிகளிடம்  பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று சிலர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக பேசினார். ஆனால், அவர் எந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை. 

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளில், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று, லண்டனில் வசிக்கும் கிங் பிஷர் நிறுவன அதிபர் மல்லையா, பிரதமர், தன்னைத் தான் குறிப்பிட்டு பேசியதாக கூறியுள்ளார். 

தவிர, தன் மீதான பிரதமரின் குற்றச்சாட்டிற்கு, அவர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். 

 

 

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: 

‛இந்திய பார்லிமென்ட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மாேடி, வங்கிகளிடம் 9,000 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக என் பெயரை குறிப்பிடாமல் பேசினார். 

வங்கிகளிடம் நான் பெற்ற கடன் தொகையின் அசல் அனைத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக பல முறை தெரிவித்துவிட்டேன். அதே போல், கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னிலையில், இந்த தொகையை தருவதாகவும் கூறியுள்ளேன்.

ஆனால், தொடர்ந்து என்னை குறை கூறி வரும் பிரதமர் மோடி, நான் திரும்ப செலுத்துவதாக கூறிய பணத்தை பெற்றுக் கொள்ளும்படி, வங்கிகளுக்கு ஏன் அறுவுருத்தவில்லை? 

அவர் அப்படி செய்தால், பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை வசூலித்த பெருமை அவரது ஆட்சிக்கு தானே சேரும். இந்த விவகாரத்தில், வங்கிகள் மவுனம் காப்பது ஏன்?’ என, விஜய் மல்லையா தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close