4 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடி

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Feb, 2019 02:39 pm
modi-held-up-at-dehradun-airport-due-to-bad-weather

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடி டேராடூன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் காத்திருந்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை மாலை 3 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைக்க இருக்கிறார்.

இதற்காக தனி விமானத்தில் டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலையம் சென்ற மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ருத்ரபூர் செல்லவிருந்த நிலையில் வானிலை மோசமானதால் விமான நிலையத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் பிரதமர் மோடி தங்கியிருந்தார்.

சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு   வானிலை சீரானதும் பிரதமர் மோடி ருத்ரபூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close