பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 18 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 05:00 pm
crpf-jawans-attacked-and-killed-by-militants-in-kashmir

ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த, 18 வீரர்கள் பலியாகினர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அவந்திபுரா புறநகர் பகுதியில், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில், துணை ராணுவப்படை வீரர்கள், 18 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அந்த பகுதியில், ராணுவம், துணை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close