அருண் ஜேட்லி நிதியமைச்சராக  இன்று பொறுப்பேற்பு?

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 08:47 am
arun-jaitley-will-be-charged-as-fm-again-today

மத்திய அமைச்சரான அருண் ஜேட்லி தான் வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை இன்று மீண்டும் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக  கடந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.

இதையடுத்து, ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதித் துறையை கூடுதலாக கவனித்து வந்தார். 2019-20 -ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டையும் மக்களவையில் அவர் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், அருண் ஜேட்லி  அமெரிக்காவிலிருந்து அண்மையில் நாடு திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர், தாம் ஏற்கெனவே வகித்து வந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பை இன்று மீண்டும் ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close