நாடு திரும்பினார் நிர்மலா சீதாராமன்!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 09:03 am
defence-minister-nirmala-sitaraman-returned-to-delhi

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்றுள்ள தீவிரவாதத் தாக்குதலையடுத்து. பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு முறை பயணமாக  நேற்று முன்தினம் ஸ்வீடன் சென்றிருந்தார்.

இந்த நிலையில்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நேற்று  நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர்  கொல்லப்பட்டனர்.

உலகையே உலுக்கியுள்ள இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான, மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9:15 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக,  பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்வீடனிலிருந்து இன்று காலை டெல்லி திரும்பினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close