நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 10:39 am
am-ready-to-give-up-my-another-son-to-mother-india-matryr-s-father-said

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரரின் தந்தை, தன்னுடைய இன்னோரு மகனையும் நாட்டுக்காக இழக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் தாக்கூர், அந்தத் தாக்குதலில் பலியானார். அவரது தந்தை இதுகுறித்து கூறும்போது, “தாய் நாட்டுக்கான சேவையில் ஒரு மகனை இழந்துவிட்டேன். என்னுடைய இன்னோரு மகனையும் நான் போருக்கு அனுப்புவேன். அவரையும் தாய்நாட்டுக்காக இழக்கத் தயார். ஆனால், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

நம் பிள்ளைகள் நன்கு படித்து, கை நிறைய சம்பாதிக்க வழிவகையுள்ள வேலையில் சேர வேண்டும் என்பது பல பெற்றோரின் கனவாக இருக்கும். ஆனால், தீவிரவாத தாக்குதலில், ஒரு மகனை இழந்த அதே நொடிப் பொழுதில், மற்றொரு மகனையும் நாட்டுக்காக போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கத் தயார் எனக் கூறும், ரத்தன் தாக்கூரின் தந்தையைப் போன்ற மனிதர்கள் நிச்சயமாக தலைவணங்கத்தக்கவர்கள் ஆவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close