பாகிஸ்தான் வர்த்தக அந்தஸ்து ரத்து: அருண் ஜெட்லி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 11:15 am
pulwama-attack-most-favoured-nation-status-to-pakistan-withdrawn-says-arun-jaitley

காஷ்மீர் புல்வாமா தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் வர்த்தக அந்தஸ்து ரத்து செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா பகுதியில், நேற்று மாலை 78 வாகனங்களில் 2,500க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், பல வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தூக்குதலுக்கு ஐ.நா.சபையைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் உள்பட கண்டனம் தெரிவித்துள்ளன. 

புல்வாமா கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது பாகிஸ்தானை மையமாக கொண்ட அமைப்பாகும்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வர்த்தக அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அதாவது, 'வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும். வர்த்தகத்துக்கு உகந்த நாடு என பாகிஸ்தானுக்கு அளித்த அங்கீகாரத்தை இந்தியா திரும்ப பெறுகிறது' என்று கூறியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close