‛சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0’? பிரதமர் மோடி சூசகம்

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 12:53 pm
surgical-strike-2-0-pm-modi-tough-talk-after-pulwama-attack

ஜம்மு - காஷ்மீரில், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப்படையை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர். பயங்கரவாதிகளின் இந்த கொலை வெறி தாக்குதலுக்கு, நாடு முழுவதும் கடும் கண்டனக் குரல் எழுந்துள்ளது. 

இந்நிலையில், பயங்கரவாதிகளை வேரறுக்க, நம் ராணுவம் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நம் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதிகள் தங்கள் செயலுக்கான தக்க தண்டனைய அனுபவித்தே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, உரி தாக்குதல் சம்பவம் நடந்த போது, நம் ராணுவம், சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தி, பாக்., பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை அழித்தது. இது, அந்நாட்டு பயங்கரவாதிகளுக்கும், அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பாக்., ராணுவத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்த, பிரதமர் நரேந்திர மாேடியின் கடும் கண்டனத்துடனான கருத்து, மீண்டும் ஓர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படலாம் என்ற வகையில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. 

அது போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே, நாட்டில் வசிக்கும் ஒட்டுமொத்த பொதுமக்களின் விருப்பமாகவும் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close