பயங்கரவாத தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 15 Feb, 2019 01:41 pm
cricketers-condemns-terror-attack-on-jawans

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், பயங்கவராத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு டுவிட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‛பயங்கராவத தாக்குதலில் நம் வீரர்கள் பலியான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்திக்கிறேன்’ என அவர் பதிவிட்டுள்ளார். 

இதே போல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஓய்வு பெற்ற வீரர்கள், வி.வி.எஸ்.லக்ஷ்மண், சேவாக், முகமது கைப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close