புல்வாமா தாக்குதல் சம்பவம்- ஓரு நாள் சம்பளத்தை கொடுப்பதாக உத்தரகாண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Feb, 2019 02:50 pm
one-day-wages-to-pulwama-victims-uttarkhand-ias-officers

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை அளிக்க உள்ளதாக உத்தரகாண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று  மாலை புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தான்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 44  சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தங்களின் ஒரு நாள் ஊதியத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தப் பணத்தை டெல்லியில் அமைந்துள்ள சிஆர்பிஎப்பின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உள்ளனர். இத்தகவலை  உத்தரகாண்ட் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் உறுதி செய்துள்ளது.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close