பிரதமர் மோடி தென் கொரியா பயணம்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Feb, 2019 05:33 pm
pm-modi-on-two-day-visit-to-south-korea

பிப்ரவரி 22-ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது தென் கொரியாவில் வழங்கப்படுகிறது.

பிரதமர் 2 நாள் பயணமாக பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தேர்தல் நெருங்குவதால், இதுவே பிரதமரின் கடைசி வெளிநாட்டுப் பயணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருதை கொடுப்பது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் சியோல் அமைதிப் பரிசு கலாச்சார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி சியோல் அமைதிப் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. இந்திய-கொரிய தொழிற்துறை அமைப்பிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close