புல்வாமா தாக்குதலை வரவேற்று கருத்து: என்டிடிவி நிறுவனத்தின் துணை செய்தி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 02:21 pm
favour-comment-about-pulwama-terror-attack-ndtv-deputy-news-editor-website-suspended

புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலை பாராட்டும் விதமாகவும், பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்தும், தன்னுடைய­ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட என்டிடிவி இணையதள செய்திப்பிரிவின் துணை செய்தி ஆசிரியர் நிதி சேத்தியை அந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா நகரில் நேற்று முன்தினம் சிஆர்பிஎஃப் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

காட்டுமிராண்டித்தனமான இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கண்டன குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வேளையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்து, பிரபல ஆங்கில செய்தி ஊடகமான என்டிடிவியின் இணையதள செய்திப் பிரிவின் துணை ஆசிரியர் நிதி சேத்தி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்களை படுகொலை செய்துள்ளதன்  மூலம், 56 அங்குலம் மார்பளவு கொண்டவரைவிட (பிரதமர் மோடி முன்பு பேசியதை  குறிப்பிட்டுள்ளார்) தாங்கள்தான் பெரியவர்கள் என பயங்கரவாதிகள் நிரூபித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பை என்னவென்று பாராட்டுவது?" என குறிப்பிட்டிருந்தார்.

 அதையடுத்து முகநூல் சந்தாதாரர்கள் ஏராளமானோர் நிதி சேத்தியின் இந்த தேச விரோத, அநாகரீக கருத்துக்கு கடும் கண்டணங்களை தெரிவிக்கத் தொடங்கினர்.

அதைக்கண்டு நிதி சேத்தியின் அநாகரீக பதிவு நிறுவனத்துக்கு பெரும் சங்கடத்தை பொதுமக்கள் மத்தியில் நிரந்தரமாகத் தோற்றுவிக்கும் என்று உணர்ந்த என்டிடிவி நிறுவனம், நிதி சேத்தியின் இந்த பதிவுக்கு அந்த நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,  இந்த செயலுக்கு தண்டனையாக அவர் இரண்டு வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, நிதின் சேத்தி மீது மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும்  என்டிடிவி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புல்வாமா சம்பவம் தொடர்பான  தமது பதிவுக்காக அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்வதாக, தமது ஃபேஸ்புக் பதிவில் நிதி சேத்தி குறிப்பிட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close