பயங்கரவாதிகள் எங்கு ஓடினாலும் துரத்தி அடிப்போம்: பிரதமர் மோடி சூளுரை

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 05:47 pm
each-drop-of-tear-after-pulwama-terror-attack-will-be-avenged-pm-modi

‛‛நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகள் எங்கு ஓடிப்போய், மறைந்து வாழ்ந்தாலும், அவர்களை துரத்தி அடிப்போம். பயங்கரவாதம் இந்த நாட்டிலிருந்து வேரறுக்கப்படும்,’’ என, பிரதமர் நரேந்திர மாேடி பேசினார். 

மஹாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் நலத்திட்டங்களை துவக்கி வைத்து, பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர், பயங்கரவாதிகளின் சதி செயலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வீர மரணத்திற்கு, நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. 

வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. நாட்டு மக்களின் ரத்தம் கொதித்து போயுள்ளது. பயங்கரவாதத்தை வேரறுக்க நாடே ஒன்றுகூடி ஒத்த குரலில் ஒலிக்கிறது. 

நாட்டின் அமைதியை சீர் குலைக்க நினைக்கும், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் எங்கு ஓடினாலும் சரி, எந்த பகுதியில் மறைந்திருந்தாலும் சரி, அவர்களை தேடித்தேடி பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை இந்த அரசு ஓயாது’’ என அவர் பேசினார். 

அந்த மாநிலத்தின் நான்தெட் பகுதியில், 450 பழங்குடியின குழந்தைகள் கல்வி பெறும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடத்தை துவக்கி வைத்தார். மேலும் சில நலத்திட்டங்களுக்கான அடிக்கற்களை நாட்டினார். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close