10 ரூபாய்க்கு சேலை - கடையில் அலையென குவிந்த பெண்கள்!!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 11:42 am
telangana-large-number-of-women-rushed-to-mall-to-buy-rs-10-saree

தெலுங்கானாவில் 10 ரூபாய்க்கு சேலையை விற்பனை செய்த கடையில் பெண்கள் அலை கடலென குவிந்தனர்.

ஹைதராபாத் மாநகருக்கு உள்பட்ட சித்திப்பேட்டையில் உள்ளது சி.எம்.ஆர். என்ற பல்பொருள் வணிக வளாகம். அங்கு வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக 10 ரூபாய்க்கு சேலை விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பெண்கள் கூட்டம், கூட்டமாக அங்கு படையெடுத்தனர். ஒரு கட்டத்தில் கடையில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. அதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.

சேலை வாங்க வந்திருந்த பெண் ஒருவரின் 5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை என்ற புகாரும் கிளம்பியது. இந்நிலையில், கடைக்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். நகை திருட்டு குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close