வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியுதவி- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Feb, 2019 05:34 pm
bharat-ke-veer-gets-unprecedented-rs-7-crore-funds-after-pulwama-attack

தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு உதவ விரும்பும் பொதுமக்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நிதி உதவியை அளிக்கலாம் என உள்துறை அமைச்சம் நினைவூட்டியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றள்ளது. 

வீர மரணம் அடைந்த துணை ராணுவப் படையினருக்கு இந்தியாவே அஞ்சலி செலுத்தி வருகிறது. பிற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரபலங்ளும் பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு வசதி செய்யும் மத்திய அரசின் பிரத்யேக இணையதளமான பாரத் கீ வீர் மூலம் பொதுமக்கள் தங்கள் நிதி உதவியை அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த அமைச்சகத்தின் அறிக்கையில், கடந்த 36 மணிநேரத்தில் மட்டும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரூ.7 கோடிக்கு மேல் அந்த இணையதளம் வாயிலாக நிதி கிடைத்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தாமாக முன்வந்து உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள உள்துறை அமைச்சகம், ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதால், http://www.bharatkeveer.com மூலம் தங்கள் உதவியை கொடுக்குமாறும் எச்சரித்துள்ளார். 

மிக அதிகமானவர்கள் அணுகுவதால் பாரத் கீ வீர் இணையதளத்தைத் திறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு இணையதளத்திற்குச் செல்ல முடியாதவர்கள், பாரத் கீ வீர் என்ற பெயரில் இதே வசதியை அளிக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்று வழியாக முயன்று பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close